எந்த கல்லூரிகளும் நாளை திறக்கப்படாது. மாணவர்கள் இதுநாள் வரை நடத்திய போராட்டங்களின் போது மத்திய- மாநில அரசுகளின் பிரதிநிதிகள் தங்களை சந்தித்து பேசவேண்டும் என்றும், அப்போது ஈழத் தமிழர்களின் நலனுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதி அளிக்க வேண்டும் .ஆனால் இதுதொடர்பாக யாரும் மாணவர்களுடன் எந்தவிதமான பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. எனவே கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர். இதனால் கல்லூரிகளை உடனடியாக திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுபோன்ற காரணங்களால் கலைக்கல்லூரிகள் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளை உடனடியாக திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கல்வி துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
No comments:
Post a Comment