மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பலருக்கும், பல சந்தேகங்கள் இருப்பது புதிதல்ல. ஆனால், சாமானிய மக்களின் சந்தேகங்களை தீர்க்க நிதி அமைச்சரே இணையத்தில் பதிலளிக்கிறார் என்பது புதிய விஷயம்.
ஜஹாங்கீர் அஜிஸ், ஆனந்த் மகேந்திரா, அமித் சிங்கால் போன்ற வல்லுனர் துணையிருக்க, இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மக்களின் கேள்விகளுக்கு இன்று பதிலளிக்கிறார்.
கூகுள் HANGOUT ல் உங்கள் கேள்விகளை #askthefm என்ற பக்கத்தில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சருக்கான உங்களது கேள்விகளை இப்பக்கத்தில் பதிவு செய்யவோ, அல்லது அதை ஒளிப்பதிவு செய்து அந்த பக்கத்தில் பதிவேற்றவோ வேண்டும்.
இதற்குமுன் அமெரிக்க அதிபர், பாரக் ஒபாமா, ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்ட் போன்றவர்கள் இந்த யுக்தியை பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவில் ஏற்கனவே நரேந்திர மோடி இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது நிதியமைச்சர் சிதம்பரம் மக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள இந்த யுக்தியை நாடியுள்ளார்.
No comments:
Post a Comment