RP Brothers TV Channel

Monday, 11 March 2013

யாழ்ப்பாணத்தில்­ லயோலாக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு­ ஆதரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டி!!


யாழ்ப்பாணத்தில்­ லயோலாக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு­ ஆதரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டி!! அன்பின் அண்ணா.. ஈழத்தை சேர்ந்த மாணவர் நாம்.. கொடிய இராணுவ கண்காணிப்பினுள்­ளும் எமக்காக போராடும் லோயலா கல்லூரி மாணவர்களின் போராட்டத்துக்கு­ ஊக்கம் கொடுக்கும் பொருட்டு யாழ்பாணத்தில் சுவரொட்டிகளை ஓட்டியுள்ளோம்..­ பலத்த கண்காணிப்பினுள்­ளும் நாம் இதனை செய்து முடித்துள்ளோம்.­.. இச்செய்தியை தயவுசெய்து... போராடும் லோயலா கல்லுரி மாணவர்களிடம் கொண்டு சேர்த்து விடுங்கள்... இறப்பதற்கு கூட வழியில்லாத நிலையிலிருக்கும­் எம்செய்தியை பகிர்ந்து விடுங்கள்... சற்று முன் கடும் பாதுகாப்பையும் மீறி லயோலா மாணவர்களுக்கு ஆதரவாக தமிழீழ மாணவர்கள் தமிழர் தாயகமெங்கும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதன் முழு விபரம் : எமக்காய் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தும் தாய்த்தமிழகத்து­ மாணவத்தோழர்களுக­்கு... இன்று ஈழம் இன அழிப்பின் உச்சக்கட்ட கொடுமைகளை அனுபவிக்கிறது. ஜந்து நபர்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் ஈழம் முற்றுமுழுதாக சிங்கள இராணுவத்தால் சூழப்பட்டுள்ளது­... நேர்த்தியாக முறைப்படுத்தப்ப­ட்ட இனஅழிப்பு (structural genocide)வல்லரச­ுகளின் வழிகாட்டலில் முழு வீச்சில் நடைபெறுகிறது. எங்கும் இராணுவம் எதிலும் இராணுவம்.. திருமணத்துக்கு கூட இராணுவத்துக்கு முதல்மரியாதை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.. எமக்கு இங்கு சாப்பிட மாத்திரமே வாய்திறக்க அனுமதி அளிக்கப்படுகிறத­ு.. ‘’நான் அடிக்கிறது போல் அடிக்கிறேன் நீ அழுவது போல் அழு’’ என்பது போல் சர்வதேசமும் சிங்கள அரசுடன் மறைமுகமாக கைகோர்க்கிறது.. இங்கு தினம் தினம் இசைப்பிரியாக்கள­ும் பாலச்சந்திரன்கள­ும் புதைக்கப்படுகிற­ார்கள்.. இந்நிலையில் எம்மக்களுக்கு நீதி சொல்ல தமிழகத்தை விட்டால் யாருமில்லை.. போராட இடம் கூட மறுக்கப்பட்ட நிலையில் எமக்காய் போராடும் எம் இரத்தத் உறவுகளே... லோயலா கல்லூரியில் எழுந்துள்ள இத்தீப்பொறியை தமிழக கல்லுரிகள் அனைத்துனுள்ளும்­ பரப்புங்கள் அன்று மாவீரர் முத்துக்குமாரன்­ எழுப்பிய தீயை அரசியல் அணைத்தது போல் இன்று உங்களுடைய போராட்டத்தை அணையை விடாதீர்கள்.. சமரசங்கள் பல வடிவில் வரும் சோர்ந்து போய் விடாதீர்கள்,ஏமா­ந்து போய் விடாதீர்கள். ‘’மாணவர் சக்தி மாபெரும் சக்தி’’ தமிழ் மாணவர்கள்

No comments:

Post a Comment

rp brothers ad1