RP Brothers TV Channel

Showing posts with label Tamil News. Show all posts
Showing posts with label Tamil News. Show all posts

Monday, 5 December 2016

Thursday, 7 January 2016

Saturday, 11 July 2015


Get a Website For Business @ Rs.2999

Get

a Website for your business at just Rs.2999 /- .
RP Brothers is a Leading Website Designing Company who can make all types of Website Like Simple website , Dynamic Website , E-commerce Website , Classified Website Etc at Best Price .

For Rs.2999 you will Get :-



1 to 4 pages

Free .in
Domain

Free 100MB Hosting

5 E-mail ID

To Book your Website , just Call / whatsapp :- +918553774615

or Log on to http://www.rpbrothers.in


Regard's

RP Brothers Info Tech

Wednesday, 27 May 2015

Tamil Online TV - Ramki TV channel Launching On 30/05/2015

New TV Channel - Ramki TV Launching On 30/05/2015

New TV Channel  - Ramki TV is Launching On 30/05/2015.


Last Year " RP Brothers info Tech " has Launched a TV channel Called " RP Brothers TV "  .
Now RP Brothers Group is Having a Plan of Launching a One More New TV Channel in the Name Of " Ramki TV "  . . RP Brothers Group Founder Mr. Ramki Birth Day is Coming on 30/05/2015 . so On that Day as a BirthDay Gift . RP Brothers Group is Going to Launch " Ramki TV " .

Few years Back Some Test Process has Started to Launch " Ramki Tv " ..  Now They have Started The Test Signal Of " Ramki TV " from Today ....

Today Morning Test Signal of Ramki TV has Started .. and One Promo Video Also Running in Ramki TV .

in that Promo they have mentioned that , " in the History of TV First Time Ramki TV using New Technology .. Ramki TV this is your TV "  ... Like this  the Promo video is Running for 15 sec . .

and They Also Launched their Logo  
this is Ramki TV New Logo ...   Launching Date on Ramki tv is 30/05/2015  but Launching Time is Still Not Confirmed From Ramki TV channel . . . .. .  hope it will be Launched around 10am to 1pm .....

Saturday, 23 May 2015

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்

தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு பதவியேற்றார். முதல்வர் ஜெயலலிதாவுடன் 28 புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற எம்.எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபைக் கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். 
 
இதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து விலகினார் ஓ.பன்னீர் செல்வம். இதனைத் தொடர்ந்து முதல்வராக பதவியேற்க வருமாறு ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார்.

அதன்படி நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆளுநரைச் சந்தித்தார் ஜெயலலிதா. அப்போது ஆளுநர் ரோசய்யாவை ஜெயலலிதா சந்தித்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

மேலும் அமைச்சரவைப் பட்டியலையும் அவர் ஆளுநரிடம் கொடுத்தார்.. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா பதவியேற்பு மற்றும் அமைச்சர்கள் துறை விவரங்களை ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டது.

ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 11 மணியளவில் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ரோசையா பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

Thursday, 2 April 2015

Hinduism Facts - இந்து சமய உண்மைகள்

Hinduism Facts - இந்து சமய உண்மைகள்

 

 திறந்த மனதோடு இக்கட்டுரையை தொடர்ந்து படிக்கவும்.அன்பே சிவம்.


இந்திய சமுதாயத்தில்வேரூன்றி இருக்கும் ஜாதி கொள்கையை, அறியாதவர்கள் இந்து சமயத்தில்விளக்கப்பட்டிருக்கும் ‘வர்ணா’வோடு ஒப்பிடுகின்றனர். அதை தவறு என்று எடுத்துரைப்பது ஒவ்வோர்இந்துக்களின் கடமையாகும்.

அந்த வகையில் இன்றுநாம் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஜாதியை எதிர்த்து என்னகூறியிருக்கிறார் என்று பார்க்கலாம். பகவத் கீதையில் எந்த ஜாதிகளின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை. பகவான் வர்ணத்தைமட்டுமே விளக்கி உள்ளார். வர்ணம் என்பது ஒருவரின் செயல்களினால்தோன்றுவது. பிறப்பால் தோன்றுவது வர்ணம் இல்லை.

வர்ணம் என்றால் என்ன?

வர்ணம் என்றால் நிறம் இல்லை. நிறம்படி பார்த்தால் இராமரும் கிருஷ்ணரும் சிவனும் காளியும் கூட கறுப்பு தான். இந்து தருமம் கூறும் வர்ணம் நாம்  சாதி என்று இன்று தப்பாக கருதுவது போல் இல்லை. ரிக் வேதத்தின்ஒரு குறிப்பிட்ட ஸ்லோகம் பிராம்மணர்கள் பரம்பொருளின் வாயில் இருந்து தோன்றியவர்கள்என்று மொழிப்பெயர்க்கப்பட்டது. ஆனால், அந்த மொழிப்பெயர்ப்பு முற்றிலும் தவறானது. அந்த ஸ்லோகத்தின் உண்மையான பொருள் என்னவென்றால், வாயானவன் பிராம்மணன்... அப்படியென்றால், பிராம்மணதொழில் செய்பவன் பரம்பொருளின் வாய்க்கு ஒப்பானவன் என்கிறது ரிக் வேதம். அதேபோல், சேவைதொழில் செய்பவர்கள் இறைவனின் திருவடிகளுக்கு ஒப்பானவர்கள். யாரும் பிறக்கும் போதேபிராம்மணராகவும் சூத்திரராகவும் பிறப்பதில்லை. தம் செயலால் இறைவனின் திருவடிகளுக்கு ஒப்பாக திகழ்ந்து உலகையே தாங்குகிறார்கள், சூத்திரர்கள். இதுதான் இந்து தர்மத்தின் மிக ஆழ்ந்த கருத்து.



 “வாயில் இருந்து குதித்தானாம் பிராம்மணன், காலில் மிதிப்பட்டு பிறந்தானாம் சூத்திரன்” இந்த தவறான மொழிப்பெயர்ப்பு படி பார்த்தால், ஓர் ஆன்மா பல முறைகள் தோன்றுகின்றன.வாயில் இருந்து தோன்றிய ஆன்மா, மீண்டும் காலில் இருந்து தோன்றுகிறது, மீண்டும் அதேஆன்மா கையில் இருந்து தோன்றுகிறது??? இது இந்து தருமத்திற்கு எதிரான ஒன்று. ஓர் ஆன்மா எப்படி மீண்டும் மீண்டும் பலமுறை தோன்றும்? ஆன்மாஒரு முறைதான் தோன்றும். முக்தியடைந்த பின்னர், பரம்பொருளை சேர்ந்துவிடும். இந்து தருமத்தின்படிஓர் ஆன்மா, முக்தியடையும் வரை பல உடல்களில் குடிக்கொண்டு தன்னை நிலைப்படுத்துகிறது.அத்தகைய ஆன்மா எந்த உயிர்களில் வேண்டுமானாலும் குடிக் கொள்ளும். ஒரு பிறவியில்இறைதொண்டு செய்பவராகவும், இன்னொரு பிறவியில் சேவைத் தொழில் செய்பவராகவும்பிறக்கலாம். அழிவில்லாத ஆன்மா எப்படி ஒவ்வொரு முறையும் பரம்பொருளின் வாயில்தோன்றும், பிறகு மீண்டும் திருவடியில் தோன்றும்? எனவே, சரியான மொழிப்பெயர்ப்புயாதெனில்..  “வாயானவன் பிராம்மணன்,கையானவன் சத்திரியன், தொடையானவன் வைசியன், காலானவன் சூத்திரன்
”. இப்பிறவியில் நீ செய்யும் செய்தொழிலுக்கு ஏற்ப நீ வர்ணாவைப் பெறுவாய்.


ஜாதியை எதிர்க்கும் பகவத் கீதை

பகவத் கீதை(அத்தியாயம் 5 : ஸ்லோகம் 29)

“யான் எல்லா உயிர்களுக்கும் உற்றவன்”

இந்த ஸ்லோகத்தில்இறைவன் எல்லா உயிர்களுக்கும் நண்பன் என்று குறிப்பிடுகிறார். இதன் மூலம், இறைவனுக்கு பிராம்மணன், சத்திரியன், வைசியன்,சூத்திரன் என்று எந்த வேறுபாடுகளும் இல்லை. எனவே, யார்வேண்டுமானாலும் இறைவனை தொழலாம். பார்ப்பனர்கள் மட்டும் தான் இறைவனுக்கு தொண்டுசெய்ய வேண்டும் என்ற பாகுபாடுகளை இறைவன் கீதையில் சொல்லவில்லை. இது அதிகார சமுதாயத்தால் பலவீனமானவர்களை அடிமைப்படுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு மாயை. மேலும், இந்துக்களில்சிலரை தீண்ட தகாதவர்கள் என்று குறிப்பிட்டு கோவிலுக்குள் நுழைய விடாமல் கொடுமை செய்வதுஎவ்வகையிலும் தர்மமாகாது. பகவானையும் அவர் அருளிய கீதையையும் மதியாதார் அவ்வாறு செய்வர்.


பகவத் கீதை (அத்தியாயம் 9 : ஸ்லோகம் 29)
 “யான் எல்லா உயிர்களிடமும் சமமான அன்பு வைத்திருக்கிறேன். இறைவனை நினைவுகொண்டவர்கள் உள்ளத்தில் என்றுமே நான் குடியிருப்பேன். அவர்களும் என் உள்ளத்தில்என்றுமே குடியிருப்பார்கள்”


இறைவன் எல்லா உயிர்களுக்கும் (மனிதர்கள் மட்டுமல்லாது, எல்லா உயிகளுக்கும்) சமமானவர் என்கிறார் பகவான். பொதுவாகவேஎல்லா உயிர்களின் உள்ளத்தில் இறைவன் குடியிருப்பார். நல்ல வினைகளை செய்வதாலும், யோகங்கள்,தியானங்களில் ஈடுபடுவதாலும் நம் உள்ளக் கமலத்தில் குடியிருக்கும் பரம்பொருளை நாம்மகிழ்விக்கலாம் என்கிறார் பகவான். ஒரு சூத்திரன் தொட்டால் தீட்டு ஆகும்என்கிறார்கள்.. அப்படியென்றால், ஒவ்வொரு உயிரின் (சூத்திரர் உட்பட) உள்ளத்திலும் குடியிருக்கும்பகவானுக்கு தீட்டு இல்லையா? பகவான் ஏன் இப்படி தாழ்ந்தவர் உள்ளத்திலும் குடியிருந்து ‘ஆசாரமில்லாமல்’ நடந்து கொள்கிறார்? புரியவில்லையா? அப்பையாவது உங்கள் மனதில் இருக்கும் இந்த சாதி, பேதம், பிரிவினை என்ற மாயை ஒழியுமா என்ற ஆசை தான் பகவானுக்கு...


பகவத் கீதை (அத்தியாயம் 18 : ஸ்லோகம் 61)

இந்த ஸ்லோகத்தில் பகவான் எல்லா உயிர்களின் இருதயத்திலும் குடியிருப்பதாககூறுகிறார். மீண்டும், குறிப்பிட்ட சாதியினர் உள்ளத்தில் தான் குடியிருப்பதாக அவர் சொல்லவில்லை.


பகவத் கீதை (அத்தியாயம் 4 : ஸ்லோகம் 13)

இந்த ஸ்லோகம் மிகவும் தெளிவான சிந்தனையோடு புரிந்து கொள்ள வேண்டிய ஸ்லோகம். நான்குவர்ணங்களும் மனிதர்களின் குணங்களைப் பொறுத்தே பகுக்கப்பட்டுள்ளன என்றுவிளக்குகிறார் பகவான். அவரவர் தன் குணத்திற்கு ஏற்ப அவரவர் செயல்களை (தொழில்களை)செய்து வாழவேண்டும். எந்தவொரு தொழிலையும் தாழ்வாகக் கருதக்கூடாது; தெருவைக்கூட்டிப் பெருக்குபவர் தாழ்வானவர்கள் என்றால் பிராம்மணர்களும் தான் கோவில்களைப்பெருக்கி சுத்தம் செய்கின்றனர். (மீண்டும் பிறப்பால் தோன்றுவது சாதி இல்லை என்றுதெளிவாக புரிகிறது)

பகவத் கீதை (அத்தியாயம் 9 : ஸ்லோகம் 30)

“கொடும்பாவி ஆனாலும், அவன் முழுமனதோடு மனம் திருந்தி கடவுளை சரணடைந்தால் அவன் உத்தமன்ஆகுவான்


சில சமயங்களில் தவறான செயல்களில் ஈடுபட்டு பாவம் செய்பவர்களை கீழ்ச்சாதி என்றுகுறிப்பிடுகின்றனர். அவர்களின் வாரிசுகளை எல்லாம் பாவிகள் என்றுகுறிப்பிடுகின்றனர். இது மிக மிக மிக தவறு. எவ்வளவு பெரிய கொடும்பாவியாக இருந்தாலும்,அவன் கண்டிப்பாக திருந்தி விடுவான்... இப்பிறவியில் இல்லாவிட்டாலும் இனிவரும்பிறவிகளில் அவன் திருந்தி விடுவான். எனவே, பாவங்கள் செய்வதால் அவனை தாழ்ந்தவன்என்றும் அவன் வாரிசுகளை தாழ்ந்தவர்கள் என்றும் குறிப்பிடுவது இந்து தருமத்திற்குஎதிரான செயல். இராமாயணம் எழுதிய வால்மீகி கூட ஒரு திருடராகவும் கொலையாளியாகவும்வாழ்ந்தவர் தான். ஆனால், அவரின் பாவங்களை உணர்ந்து மனம் திருந்தி இறைவனைமுழுமனதுடன் சரணடைந்த்தால் இன்று வரை அவரை இவ்வுலகம் போற்றுகிறது. வால்மீகியைவிடுங்கள், நமது அருணகிரிநாதர்? தெரியும் தானே...

பகவத் கீதை (அத்தியாயம் 9 : ஸ்லோகம் 31)
”பாவம் செய்தவனும் புனிதமாகி நிரந்தரஅமைதியை பெறுவான்”

எந்தவொரு ஆன்மாவும் தூய்மையான தியானங்களினாலும் யோகங்களினாலும் புனிதமடையும். அதுபிராம்மண உடலில் குடியிருக்கவேண்டும் என்று எந்தவொரு நிர்பந்தமும் இல்லை. கொலையாளிஉடலில் குடிக்கொண்டிருக்கும் ஆன்மா கூட முக்தி பெறும்; அவன் மனம் திருந்தி இறைவனைமுழுமனதோடு சரணடைந்தால்...

பகவத் கீதை (அத்தியாயம் 9 : ஸ்லோகம் 32)
”பல தோற்றங்கள் கொண்டவர் பரம்பொருள், அவருக்குப் பலப் பெயர்கள். விஷ்ணுவாகநின்று காக்கவும், சிவனாக நின்று அழிக்கவும், பிரம்மாவாக நின்று படைக்கவும்செய்கிறார். பரம்பொருள் எங்கும் நிறைந்திருக்கிறார்.”

எங்கும் என்று குறிப்பிடுவது தீண்டாதகாதவர் என்று தூற்றும் மனிதர்கள் உடனும்இருக்கிறார். அவர்கள் வாழும் வீட்டிலும் இருக்கிறார். அவர்களோடு இருக்கிறார்.அவர்களோடு கலந்து இருக்கிறார்... இப்போது சொல்லுங்கள் இதன்படி பார்த்தால்பரம்பொருளும் தீண்டதகாவதரா?

பகவத் கீதை (அத்தியாயம் 18 : ஸ்லோகம் 41)
“பிராம்மண, சத்திரிய, வைசிய, சூத்திரர்களை அவரவர் குணங்களுக்கும் திறமைகளுக்கும்ஏற்ப பகுக்கப்பட்டுள்ளது.


ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். உங்களுக்கு மூன்று குழந்தைகள்..ஒருவனுக்கு போலிஸ் ஆக ஆசையிருக்கும், இன்னொருவனுக்கு ஓவியன் ஆக ஆசையிருக்கும்,இன்னொருவனுக்கு ஆசிரியர் ஆகும் ஆசையிருக்கும். அதுபோல தான் பரம்பொருளுக்கு 7பில்லியன் குழந்தைகள் (இவ்வுலகில் மட்டும்)... அவரின் ஒவ்வொரு குழந்தைகளுக்கும்ஒவ்வோர் ஆசை, ஒவ்வொரு திறமை, ஒவ்வொரு குனம்.. என் மூத்த மகன் ஆசிரியர் அதனால் தான்அவன் தான் உயர்ந்தவன் என்று நீங்கள் நினைப்பீரா? இல்லை என் இளைய மகன் போலிஸ்அதனால் அவன் உயர்ந்தவன் என்று நினைப்பீரா? இல்லை தானே..? அதுபோல தான் பகவான்சொல்கிறார். அவரின் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனிப்பட்ட குணங்கள் இருக்கிறதாம்,அந்த குணங்களுக்கு ஏற்ப அவர்கள் வாழ்கின்றனர். புராணக் காலத்தின்படி பார்த்தால்சத்திரியனுக்கு (அரசன்)க்கு பிறந்த கௌதம புத்தர் பிராம்மணராகினார். பிராம்மணனுக்குபிறந்த பரசுராம் போரில் கலந்து கொண்டதால் சத்திரியன் ஆகினார். இக்காலத்துபடிசொன்னால், மருத்துவ தந்தைக்குப் பிறக்கும் மகன் மருத்தவன் ஆகிவிட முடியுமா? அவன்வளர்ந்து அவனின் குணங்களுக்கு ஏற்றவாறு அவன் தேர்ந்தெடுக்கும் துறையைப் பொறுத்தேஅவனின் வர்ணாவும் அமைகிறது.
பகவத் கீதை (அத்தியாயம் 18 : ஸ்லோகம் 42)
பிராம்மணர் ஆக என்ன குணங்கள் தேவை?
(நோக்கவும், பிராம்மணர்கள் ஆக
qualificationsஎனப்படும் தகுதிகள்தேவைப்படுகிறது. பிறப்பால் இல்லை.)
”சாந்தம், மன-அமைதி, எளிமை, தெளிவு,உளத்தூய்மை, எல்லா உயிர்களிடையேயும் அன்பு, மன்னிக்கும் சுபாவம், நேர்மை, ஞானம்,நம்பிக்கை, தெளிவான சிந்தனை இவை யாவும் பிராம்மணர் ஆக தகுதிகள்.”

பிறக்கும் போதே யாரும் இக்குணங்களோடு பிறப்பதில்லை... எனவே, பிறப்பால் யாருமேபிராம்மணர் ஆக முடியாது.
பகவத் கீதை (அத்தியாயம் 18 : ஸ்லோகம் 43)

சத்திரியர் ஆக என்ன குணங்கள் தேவை?

“வீரமுடைய எண்ணம், மாண்பு, தைரியம், பெருந்தன்மை, உயர்ந்த குணம், தாராளம்,தன்னலமற்ற, வாரி வழங்குகிற, ஈகை குணம், சிறப்பாக தலைமை வகிக்கும் குணம் இவை யாவும்சத்திரியராக இருக்க வேண்டிய தகுதிகள்



யார் வேண்டுமானாலும் இத்தகுதிகளைக் கொண்டிருக்கின் சத்திரியர் ஆகலாம். தங்களைசத்திரியர் என்று மார்தட்டி கொள்வோர், உங்களிடம் இக்குணங்கள் உள்ளதா என்றுபரிசோதித்து கொள்ளவும்.


பகவத் கீதை (அத்தியாயம் 18 : ஸ்லோகம் 46)

”ஒருவன் தான்செய்யும் தொழிலை, இறைநம்பிக்கை கொண்டு தூய்மையான எண்ணத்தோடும் நேர்மையாகவும்செய்தால் அவன் உன்னதம் அடைகிறான்”

ஒருவன் சாக்கடை சுத்தம் செய்பவனாக இருந்தாலும் சரி இறைவனுக்குத் தொண்டு செய்பவராகஇருந்தாலும் சரி, உழவராக இருந்தாலும் சரி, போலிஸாக இருந்தாலும் சரி.. அவன் எந்ததவறும் செய்யாமல் தன் தொழிலை நேர்மையாக செய்தால் அவன் உன்னதமானவன்.

பகவத் கீதை (அத்தியாயம் 18 : ஸ்லோகம் 47)
”தன் திறமைக்கு முற்றிலும் ஒவ்வாத ஒரு தொழிலை, உயரிய தொழில் என்று கருதி; அத்தொழிலை தப்பு தப்பாக செய்வதை விட. தன் திறமைக்கு ஏற்ற ஒரு தொழிலை சிறப்பாகசெய்வது சிறப்பு”

ஆஹா.. என்னவொரு அருமையான கூற்று. இக்காலக்கட்டத்தில் மருத்துவர் ஆனால் தான்உயர்வாக பார்க்கிறார்கள் என்று சொல்லி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மருத்துவராகஆக சொல்லி கட்டாயம் படுத்துகிறார்கள். இதனால், ஓவியம் வரையும் திறன் கொண்ட ஒருவன்மருத்துவனாகி தன் தொழிலை தப்பு தப்பாக செய்கிறான். இது சகஜமாக நடக்கும் தானே? அதைதான் பகவான் கூறுகிறார். மேன்மையான தொழில் என்று கருதி மருத்துவராகி அத்தொழிலைதப்பு தப்பாக செய்வதை விட, நீ திறன்பெற்ற ஒரு தொழிலை செய்து மேன்மை பெறு.


பகவத் கீதை (அத்தியாயம் 18 : ஸ்லோகம் 63)

“உங்களுக்கு யான் ஞானமும் அறிவும் அருளி இருக்கிறேன். அதை முறையாகஉபயோகப்படுத்துவது உங்களின் கடமை. சுதந்திரமாக உங்களின் திறனுக்கு ஏற்ற கருமங்களை(செயல்களை) செய்து தருமநெறி தவறாமல் வாழுங்கள்



இறைவன் எல்லோருக்கும் சமமான ஞானத்தையும் அறிவையும் அருளி இருக்கிறார். திறமைஎன்பது தாமாக வளர்வது. யாரும் ஒரு குறிப்பிட்ட திறனோடு பிறப்பதில்லை. நீச்சல்அடிப்பதில் கெட்டிக்காரன் மீன், ஓடுவதில் கெட்டிக்காரன் சிறுத்தை, தாவுவதில்கெட்டிக்காரன் குரங்கு.... இதில் எப்படி இம்மூவரையும் ஒப்பிட்டு எவர் உயந்தவர்எவன் தாழ்ந்தவர் என்று சொல்வது? நாட்டைக் காப்பதில் நீ கெட்டிக்காரன், உன் கையில்ஏர் கொடுத்து உழ சொன்னால் உன்னால் உழுது நெல் விளைக்க முடியுமா? அதெல்லாம், இறைவன்அருளிய ஞானத்தையும் அறிவையும் கொண்டு அவரவர் தமக்கு தாமே பகுத்துக் கொண்ட தனிப்பட்டதிறமை.


இறுதியாக ஒரு சிறு கூற்று, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஜாதியைப் பெரிதாகக் கருதிபிராம்மணர்களை உயர்வாக சொல்லியிருந்தால்... அவர் ஏன் மாடு மேய்ப்பவராக வாழ்ந்தார்?எனவே, புரிந்து கொள்ளுங்கள். ஜாதி நம் இந்து சமயத்திற்கு எதிரானது. அதை முடிந்தவரைதவிர்த்துவிடுவோம்.

Sunday, 28 December 2014

திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிர
ுக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

* இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

* ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

* பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

* ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

* பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

* சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

* ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

* பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

* மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

* அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

* வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

* மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

* திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

* சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

* ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

* திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

* ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

* 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

[இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை

இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்.!

இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்.!
எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :
1. உங்கள் செல் போனிலிருந்துக்க
ு *#06# டயல் செய்யுங்க...
2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்...
3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க...
4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை ( cop@vsnl.net ) க்கு மெயில் பண்னுங்க...
5. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க...
6. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்...!

Thursday, 11 December 2014

லிங்கா

Linga story நடிகர் : ரஜினி
நடிகை : அனுஷ்காஇயக்குனர
் : கே.எஸ் ரவிக்குமார்இசை : ஏ.ஆர்.ரகுமான்ஓளிப்பதிவு : ஆர் ரத்தினவேலு
சோலையூர் கிராமத்தில் ஊர் தலைவராக இருந்து வருகிறார் விஸ்வநாத். இவரை அந்த ஊர் மக்கள் அனைவரும் மதித்து, இவருடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு வருகிறார்கள். இந்த ஊரின் எம்.பியான ஜெகபதி பாபு அரசு அதிகாரியான பொன்வண்ணனை கொலை செய்கிறார். இதில் பொன்வண்ணன் உயிர் பிரிவதற்குமுன் விஸ்வநாத்திடம் ஊரில் பல ஆண்டுகளாக மூடியிருக்கும் கோயிலை திறக்க வேண்டும் என்று கூறிவிட்டு இறக்கிறார்.

அந்த கோயிலை திறக்க வேண்டுமானால் கோயிலை கட்டிய லிங்கேஸ்வரனின் வாரிசுகள் தான் திறக்க வேண்டும். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில் விஸ்வநாத்தின் பேத்தியான அனுஷ்கா லிங்கேஸ்வரனின் வாரிசான லிங்கா என்னும் ரஜினியை தேடி செல்கிறார்.

சென்னையில் ரஜினி தன் நண்பர்களான சந்தானம், கருணா ஆகியோருடன் திருட்டு தொழில் செய்து வருகிறார். இவர்கள் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு ஜெயிலிலுக்கு செல்கிறார்கள். இவர்களை அனுஷ்கா தன் முயற்சியால் ஜெயிலில் இருந்து விடுவிக்கிறார். அதன்பின்பு ரஜினியிடம் லிங்கேஸ்வரனின் பேரனான நீங்கள் சோலையூர் கிராமத்துக்கு வரவேண்டும் என்றும் கோவிலை திறக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அதற்கு ரஜினி என் தாத்தா எனக்காக ஏதும் செய்யவில்லை ஆதலால் நான் வரமாட்டேன் என்று கூறி மறுக்கிறார்.

அதன்பின்பு ரஜினி தன் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு 1.5 கோடி மதிப்புள்ள ஒரு நகையை திருடுகிறார். இந்த நகையை சேட்டான மதன்பாப்பிடம் கொடுக்கிறார். இவரை போலீசில் சிக்க வைக்கிறார் அனுஷ்கா. இதையறியும் ரஜினி, மதன்பாப்பால் நாமும் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து அனுஷ்காவுடன் சோலையூர் கிராமத்திற்கு செல்கிறார்.

அங்கு ஊர் தலைவரான விஸ்வநாத், ரஜினியிடம் இந்த கோயிலில் உள்ள லிங்கம் மரகத கல்லால் செய்யப்பட்டது. இதை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறார். பல கோடி மதிப்புள்ள மரகத லிங்கத்தை திருடி விற்றால் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்று எண்ணி கோயிலுக்கு செல்கிறார். அங்கு கோயிலுக்கு யாரோ சென்று விட்டார்கள் என்று நினைத்து மக்கள் கோயிலை சுற்றி வளைக்கிறார்கள். இதிலிருந்து தப்பிப்பதற்காக ரஜினி கோயிலை திறந்து பூஜை செய்கிறார். அப்போது மக்களிடம் விஸ்வநாத், ரஜினியின் தாத்தா லிங்கேஸ்வரனின் பெருமைகளை எடுத்து கூறுகிறார். இதைக்கேட்ட ரஜினி, தன் தாத்தாவின் உயர்ந்த எண்ணத்தையும் உள்ளத்தையும் எண்ணி வருந்துகிறார். இதனால் இந்த ஊரை விட்டு செல்ல நினைக்கிறார்.

அப்போது விஸ்வநாத், அரசு அதிகாரியான பொன்வண்ணனை யாரோ கொலை செய்து விட்டதாகவும், இந்த ஊரில் உள்ள பாலத்திற்கும், கோயிலுக்கும் ஆபத்து இருக்கிறது என்றும் கூறுகிறார். நீங்கள் கொலை செய்தவர்களையும், இந்த ஊரையும் காக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

அதன்பிறகு இந்த ஊரின் எம்.பி.யாக இருக்கும் ஜெகபதிபாபு, ஊரில் உள்ள பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டி அதில் ஊழல் பண்ணலாம் என்று திட்டமிட்டு வருவது ரஜினிக்கு தெரிய வருகிறது. இறுதியில் ஜெகபதிபாபுவின் திட்டத்தை முறியடித்தாரா? பாலத்தை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

சூப்பர் ஸ்டாரின் அறிமுக பாடல் அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. வழக்கம்போல் தன் தோளில் மொத்தப் படத்தையும் சுமந்து கொண்டு ரசிகர்களை திருப்தி செய்கிறார். இரண்டு கதாபாத்திரத்திலும் அவருக்கே உரிய ஸ்டைலில் அசத்தியிருக்கிறார். கம்பீரமான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். இவர் பேசும் வசனங்கள் எல்லாம் திரையில் தீ பறக்கிறது. இவரின் சின்ன சின்ன ரியாக்ஷன்ஸ் மிகவும் ரசிக்கும்படி அமைந்துள்ளது.

மற்ற கதாநாயகிகள் போல் பாடல் காட்சிகளுக்கு வந்து செல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார் அனுஷ்கா. இரண்டாம் பாதியில் அழகாக வந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சோனாக்‌ஷி சின்ஹா.

சந்தானத்தின் காமெடி படத்தில் பெரிதும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ரஜினியுடன் இவர் சேர்ந்து திருடும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.

குறுகிய காலத்தில் கதை, திரைக்கதை அமைத்து ரசிகர்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றார் போல் சூப்பரான படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரால் மட்டுமே இயக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். இவரது அனுபவம் திரையில் ஒவ்வொரு காட்சிகளிலும் நன்றாகவே தெரிகிறது. 6 மாத காலத்தில் நிறைய கதாபாத்திரங்களை வைத்து விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து பிரம்மாண்டான பாடல் காட்சிகளை உருவாக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது.

ரத்தினவேலு என்னும் ராண்டி, ராட்டினம் போல் அணையின் பிரம்மாண்ட காட்சியை நம் கண்முன் நிறுத்துகிறார். ரெயில் சண்டை காட்சிகள் ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார். இரண்டு காலங்களுக்கு இடையேயான காட்சிகளை ஒளிப்பதிவு செய்வதை திறமையாக கையாண்டிருக்கிறார்.

பிரம்மாண்டத்திற்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்திருக்கிறது ஏ.ஆர்.ரகுமானின் இசை. இந்தியனே... பாடல் ஒவ்வொரு ரசிகர்கள் மனதிலும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘லிங்கா’ ரசிகர்கள் மனதில் நிற்கிறார் கிங்கா

Sunday, 7 December 2014

மீனவர்கள் கடல் எல்லையை தாண்டினால் எச்சரிக்கும் புதிய செல்போன்

 https://play.google.com/store/apps/details?id=com.cando.SOR

தூத்துக்குடி: தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டும்போது, அவர்களை எச்சரிக்கும் வகையிலான செல்போன் அப்ளிகேஷன் சாப்ட்வேரை ஒரு என்ஜீனியர் கண்டுபிடித்துள்ளார். தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது எல்லைக்கோடு குறித்து தெரியாததால் இலங்கை எல்லை பகுதியில் சென்று விடுவது நடந்து வருகிறது. இதனால் தமிழக மீனவர்களை இலங்கை கடற்ப்படையினர் கைது செய்து கொடுமைப்படுத்துவதும், கடும் தண்டனை வழங்குவதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
 https://play.google.com/store/apps/details?id=com.cando.SOR
இதனை தவிர்க்கும் பொருட்டு ஆண்டிராய்ட் கைத்தொலைபேசிகளுக்கான கூகுள் பிளே ஸ்டோரின் இந்திய வடிவத்தில் இலவசமாக கிடைக்கக்கூடிய 'சேவ் அவர் ரேஸ்' சுருக்கமாக 'எஸ் ஓ ஆர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாப்ட்வேர் இணையத் தொடர்பு இல்லாமலும், கைத்தொலைபேசி சிக்னல் இல்லாமலும்கூட பயன்படுத்திட முடியும். மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது இந்திய கடல் எல்லைமுடிந்து அடுத்த நாட்டின் கடல் எல்லை நெருங்குவதை 1 கிலோ மீட்டருக்கு முன்பே அவர்களது மொபைல் போனில் அது எச்சரிக்கை ஒலியினை எழுப்பும். உதாரணத்திற்கு படகு ஒன்று சர்வதேச கடல் எல்லையை நெருங்கும்போதே இந்த செல்போன் எச்சரிக்கை ஒலியெழுப்பும்.
 https://play.google.com/store/apps/details?id=com.cando.SOR
சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி விட்டால், எச்சரிக்கை படம் திரையில் தோன்றுவதோடு, வெளியேறு என்ற எச்சரிக்கை வார்த்தைகளையும் இந்த செல்போன் எழுப்பும். இதனால் மீனவர்கள் உஷராகி, எல்லை மீறாமல் மீன் பிடிக்க முடியும். இதற்கான சாப்ட்வேரை தூத்துக்குடி, பெரைரா தெருவை சேர்ந்த என்ஜீனியர் ரெசிங்டன் என்பவர் கண்டறிந்துள்ளார். இதனை அவர் நேற்று தூத்துக்குடியில் அறிமுகம் செய்தார். இதுகுறித்து ரெசிங்டன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் ஏழு லட்சம் மீனவ குடும்பங்கள் உள்ளன. இவர்களது தீராத பிரச்னை இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதால், அவர்களது கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இதற்கான நிரந்தர தீர்வு வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இரவு பகல் பராது தொடர்ந்து மூன்று ஆண்டு முயற்சி, பல்வேறு கட்ட சோதனைகளை நடத்தி இந்த சாப்ட்வேர் கண்டறிந்துள்ளேன்.
 https://play.google.com/store/apps/details?id=com.cando.SOR
இந்திய-இலங்கை இந்த இரு நாடுகளுக்கிடையேயான கடல் எல்லைக் கோடு வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் வளைகுடா ஆகியவற்றை கொண்டதாகும். எல்லைக்கோடு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில் 1974 ல் வரையறை செய்யப்பட்டது. இது 1,095 கி.மீ., நீளம் கொண்டது. கடலளவில் 591 நாட்டிக்கல் மைல் கொண்டது. கடலில் இந்த எல்லைக் கோடுகள் கண்ணுக்கு புலப்படாத கோடு, என்பதால் மீனவர்கள் அடிக்கடி பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். கூகுள் பிளே ஸ்டோரில் இந்த சாப்ட்வேர் உள்ளது. பேஸ்புக், வாட்ஸ்அப், போல் இதனை மீனவர்கள் தங்களது ஆன்ட்ராய்டு மொபைலில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். தங்கள் மொபைலில் டவுன்லோடு செய்த பின்னர், எந்த பயமும் இன்றி தடங்கலின்றி கடலில் மீன் பிடிக்கலாம்.
 https://play.google.com/store/apps/details?id=com.cando.SOR
மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது இலங்கை கடல் எல்லைக்கு முன்பாக ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் எச்சரிக்கை கோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை மீனவர்களின் படகு அடையும் போது, அவர்கள் வைத்திருக்கும் ஆண்ட்ரைடு மொபைலில் மஞ்சள் வண்ணத்தில் எச்சரிக்கை அறிவிப்புடன், ஒலி எழுப்பும். அதனை தாண்டி அந்த படகு இலங்கை எல்லைக்கோட்டை தாண்டும் போது,சிவப்பு வண்ணத்தில் "வெளியே' என எச்சரிக்கையுடன் கூடிய ஒலியினை எழுப்பும். இந்த சாப்ட்வேரில் ஒரு திசை காட்டும் கருவி உள்ளது. இது வேலை செய்ய எவ்வித இணையதள வசதியும்,மொபைல் சிக்கனலும் தேவையில்லை. மொபைல் ஆப் லைனில் இருந்தாலும் செயல்படும் விதமாக 
வடிவமைக்கப்பட்டுள்ளது.ஆபத்து என்ற சமயத்தில் மீனவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபயக் குரலாக குறுந்தகவல் அனுப்புவதற்கான வசதியும் இந்தச் செயலியில் உள்ளது. ஜி.பி.எஸ்.கருவியில் அட்சரேகை, தீர்க்கரேகை அடிப்படையில் வரைப்படங்கள் இருப்பதால், சாதாரண மீனவர்களுக்கு தெரிவதில்லை. நான் கண்டுப் பிடித்துள்ள புதிய சாப்ட்வேரில் மேப் வசதியுள்ளது. அதில் அனைவரும் அறிந்துக் கொள்ளும் வண்ணம் அனைத்து கட்டளைகளும் தமிழில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனை மீனவர்கள் எளிதில் புரிந்து கொள்ளமுடியும்.மீனவர்களின் படகுகள் எல்லை தாண்டியற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைப்பதில்லை. இந்த சாப்ட்வேரில் மீனவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நபருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும், அவர்களது மொபைல் போனில் எல்லை தாண்டியதும் பதிவாகிவிடும்.
 https://play.google.com/store/apps/details?id=com.cando.SOR
ஆபத்து நேரங்களில் மீனவர்கள் இந்த சாப்ட் வேரை மொபைலின் திரையில் தொட்டால் போதும், அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பும்.அதில் மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ., கோடுடன் வருவதால் பொய்தகவல்களை அனுப்ப முடியாது. மேலும் படகு இருக்கும் இடத்தை துல்லியமாகவும், எஸ்.எம்.எஸ்., அனுப்பியவரின் மொபைல் எண்ணும் அதில் பதிவாகி இருக்கும். இதன் மூலம் நடுக்கடலில் தத்தளிப்பவர்கள் குறித்த தகவலை எளிதில் கரையில் உள்ளவர்களுக்கு தெரிவித்து, கடற்படை மூலம் மீனவர்களை எளிதில் மீட்க வழி செய்யும், இதில் தகவல்கள் அனைத்தும் எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்படுவதால், இதற்க்கு மட்டும் அவர்கள் மொபைல் போனில் சிக்னல் தேவைப்படும். இது மீனவர்களை துன்பங்களில் இருந்து காக்கும் வரப்பிரசாதமாக அமையும் என்றார் அவர்.
 Download SOR app ( Save our Race - Save our Indian Fisher Man)

Monday, 15 September 2014

New List OF Tamil Channel

Government owned channels
• Podhigai TV (DD 5)
• DD Chennai (DD 1)
• DD Coimbatore
• DD Madurai
• DD Pudhucherry

Entertainment
• STAR Vijay
• PEPPERS TV
• Sun TV - part of Sun Network
• Kalaignar TV - part of Kalaignar network
• Raj TV - part of Raj Network
• Jaya TV - part of Jaya network
• Captain TV
  • RP Brothers Tv - part of RP Brothers Info tech ( Ramki & Praveen )
  • • Polimer TV
• Makkal TV
• Mega TV
• Zee Tamil
• Vasanth TV
• Moon TV
• Imayam TV
• Win TV
• Tamilan TV
• Thendrel TV
• Dheeran TV
• Arra TV
• Channel 3 Roses ( group of rajmohan,bupesh & ansari private ltd ) / upcoming GEC
Movies
• KTV - part of Sun Network
• Raj Digital Plus - part of Raj Network
• J Movie - part of Jaya network
• Mega 24
Music
• 7S Music
• Sun Music - part of Sun Network
• Sun Max - 80's Tamil songs
• Isai Aruvi - part of Kalaignar network
• Jaya Max - part of Jaya network
• Captain Music - part of Captain Media Group
• G7 SPV
• Channel Ufx
• Mega Musiq
• Raj Muzix - part of Raj Network
• SS TV
• Super
• YES J TV
• Big Isai
• M Tunes Tamil
Classical Music
• Sun Life - part of Sun Network
• Murasu - part of Kalaignar network
Comedy Channels
• Adithya TV - comedy; part of Sun Network
• Sirippoli - comedy; part of Kalaignar network
Children's Channels
• Chutti TV - children's; part of Sun Network
• Chithiram - children's; part of Kalaignar network
Infotainment Channel
• Discovery Channel Tamil
News
• Puthiya Thalaimurai
• Thanthi TV
• Sun News - part of Sun Network
• Seithigal - part of Kalaignar network
• Raj News 24x7 - part of Raj Network
• Jaya Plus - part of Jaya network
• Captain News
• GTV SPV
• Sathiyam TV
• Lotus News
• YES J NEWS
• News Plus TV
• JAI Tamil TV
Shopping Channels
• Max Vision – shopping
• Shopping Zone 24*7 Channel - shopping
Hindu Spiritual Channels
• Krishna TV - hindu; spiritual and social
• OHM TV tamil – hindu
• Sri Sankara TV – hindu
• SVBC TTD – hindu
• Darisana
Christian Spiritual Channels
• Angel TV
• Blessing TV
• Blessing Kids
• Aashirvatham TV
• Jesus TV
Infotainment Channels aired partly in Tamil
• TLC - with Tamil audio feed
• Fox Traveller - with Tamil audio feed
• History TV18 - with Tamil audio feed
• National Geographic Channel - with Tamil audio feed
• Nat Geo Wild - with Tamil audio feed
• Animal Planet - with Tamil audio feed
• Discovery Turbo - with Tamil audio feed
• Discovery Science - with Tamil audio feed
• Travel Trendz TV - with Tamil audio feed
Kids Channels aired partly in Tamil
• Cartoon Network
• Discovery Kids
• CBeebies
• Disney Channel
• Disney Junior
• Disney XD
• Hungama TV
• Nickelodeon TV
• Pogo
• Sonic Nickelodeon
malaysia
• Astro Mudhalthirai
• Astro Thangathirai
• Astro Vaanavil - cultural and lifestyle related
• Astro Vellithirai - movies
• Astro Box Office Movie Thanggathirai - pay-per view
• Galaxy Nakshatra - movies
Singapore
• MediaCorp TV12 Vasantham - part of government owned MediaCorp TV12
• Vannathirai
Sri Lanka
• Dan TV - part of privately owned but pro-government Dan TV Network; broadcasting globally
• Dan Music - music; part of privately owned but pro-government Dan TV Network
• Dan News - news; part of privately owned but pro-government Dan TV Network
• Dan Sports - sports; part of privately owned but pro-government Dan TV Network
• Dan Yaal Ozhi - youth entertainment; part of privately owned but pro-government Dan TV Network
• K4U - movies; part of privately owned but pro-government Dan TV Network
• Kalvi TV Channel One - education; part of privately owned but pro-government Dan TV Network
• Nethra TV - general entertainment; part of government owned Rupavahini corporation, broadcasting in Sri Lanka & East Asia
• OHM TV Tamil - hindu; part of privately owned but pro-government Dan TV Network
• Shakthi TV - entertainment; part of privately owned MTV Channel network, broadcasting in Sri Lanka
• Shruthi TV - hindu
• Vasantham TV - general entertainment; part of government owned Independent Television Network group
• Vettri TV - general entertainment; part of privately owned Voice of Asia Network
• Udhayam TV - entertainment
Canada
• ATN Jaya TV - cable TV
• Balamurugan TV - maha TV
• Tamil Entertainment Television (TET)
• Tamil One - cable TV, previously known as Tamil TV
• Tamil Vision International - cable TV
United Arab Emirates
• Sangamam TV
International
• Ayngaran TV - Kalaignar TV programmes
• Cee(I)TV - general entertainment, telecasting mainly Jaya TV programmes
• Deepam TV - general entertainment; UK based
• Discovery Tamil - infotainment channel from Discovery Network
• Global Tamil Vision - general entertainment; pro-Tamil; previously known as Thendral TV and Tharisanam TV
• Holy God TV - christian; France based
• Tamil Television Network - defunct; France b

Wednesday, 23 April 2014

தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தொழிலாளர்களுக்கு இன்று ஊதியத்துடன் விடுமுறை: தமிழக அரசு


தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அனைத்து தொழிலாளர்களுக்கும் இன்று ஊதியத்துடன் விடுமுறை வழங்கவேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளது தமிழக அரசு. அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் எச்சரிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் இன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 1951-ம் வருட மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் பிரிவு 135 பின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் (தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட), உணவு நிறுவனங்கள், திரையரங்குகள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் (தினக்கூலி தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் உட்பட) தேர்தல் நாளான இன்று (வியாழக்கிழமை) அவர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே இத்தகவல் ஊடகங்கள் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில அமைப்புகள் விடுமுறை அளிக்காமல் அனுமதி மட்டும் அளிப்பதாக தகவல் தொழிலாளர் துறைக்கு வந்துள்ளது. ஆகையால், மேற்கூறிய அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களுடைய தொழிலாளர்களுக்கு இன்று கட்டாயமாக விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது' என இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Friday, 25 October 2013

புதுயுகம்


சென்னை: புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுமத்திலிருந்து ‘புதுயுகம்' எனும் பொழுதுப்போக்கு டிவி சேனல் இன்று முதல் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. ‘நியூ ஜெனரேஷன் மீடியா' நிறுவன தலைவர் சத்திய நாராயணன் இதனை தொடக்கி வைத்தார். குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என்று அனைவரும் ஒருசேர அமர்ந்து பார்த்து ரசிக்கும் வண்ணம் நெடுந்தொடர்கள் மற்றும் குறுந்தொடர்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவாம். இந்த தொடர்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டு புனையப்பட்டுள்ளன. சென்னை: புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுமத்திலிருந்து ‘புதுயுகம்' எனும் பொழுதுப்போக்கு டிவி சேனல் இன்று முதல் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. ‘நியூ ஜெனரேஷன் மீடியா' நிறுவன தலைவர் சத்திய நாராயணன் இதனை தொடக்கி வைத்தார். குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என்று அனைவரும் ஒருசேர அமர்ந்து பார்த்து ரசிக்கும் வண்ணம் நெடுந்தொடர்கள் மற்றும் குறுந்தொடர்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவாம். இந்த தொடர்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டு புனையப்பட்டுள்ளன. புது யுகம்... புதிய தொலைக்காட்சி தொடக்கம் பொழுதுகள் போக்குவதற்கு இல்லை அனுபவிக்கவேண்டியவை என்பதை உணர்த்தும் வகையில் காலை முதல் இரவு வரை நேயர்களை ஒருமுகப்படுத்தும் வகையில் புதுயுகம் தொலைக்காட்சியில், நிகழ்ச்சிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. புதிய கோணத்தில் இந்த டிவியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தொடர்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், விவாதங்கள் என்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் புதிய கோணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளனவாம். அழ வைக்காத சீரியல்கள் வீட்டுப் பெண்களை அழவைத்து அழகு பார்க்கவைப்பதிலும் முறையற்ற உறவுகளைக்காட்டி பார்வையாளர்களை வசீகரிக்கும் நோக்கமுமின்றி, நிகழ்ச்சிகளிலும் தொடர்களிலும் கேளிக்கை , பொழுதுபோக்கு , கொண்டாட்டம் அதே சமயத்தில் வாழ்க்கை மதிப்பீடுகளை தூக்கிப்பிடிக்கும் செய்திகளும் கொண்டதாய் புதுயுகம் உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர் தொலைக்காட்சி நிறுவனத்தினர். சன் நியூஸ் சேனலுக்கு போட்டியாக புதிய தலைமுறை ஒளிபரப்பாவதைப் போர சன்டிவி சேனலுக்கு கடுமையான போட்டியை புதுயுகம் சேனல் உருவாக்கும் என்கின்றனர் ஊடக உலகத்தினர்.

Tuesday, 15 October 2013

புது யுகம்


புதிய தலைமுறை’ தொலைக்காட்சி குழுமத்திலிருந்து அக்டோபர் 23ம் தேதி முதல் ‘புது யுகம்’ என்ற புதிய பொழுது போக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பாக உள்ளது. எச்டி தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பாக உள்ள இத் தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பை அளிக்கக் கூடியதாகும். இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சிஇஓ ஷியாம் குமார் கூறுகையில், “இந்த ‘புது யுகம்’ தொலைக்காட்சியை ஒளிபரப்ப இருப்பது மிகவும் மகிழ்ச்சி தரக் கூடிய ஒன்றாகும். தீபாவளிக்கு முன்னதாகவே இத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பைத் துவக்க முடிவெடுத்துள்ளோம். இத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் நிச்சயம் தனித்தன்மை வாய்ந்தவையாக இருக்கும். நேயர்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தையும், புதிய அனுபவத்தையும் இத் தொலைக்காட்சி மூலம் வழங்க இருக்கிறோம்,” என்றார். இத் தொலைக்காட்சியின் மெகா தொடர்கள், சினிமா நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் போன்ற பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா, சமுத்திரக்கனி, ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம், நிம்பஸ் ஆகியோர் தொலைக்காட்சித் தொடர்களை தயாரிக்க உள்ளார்கள். ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ், மொபைல் ஆகியவற்றிலும் இத்தொலைக்காட்சியைப் பார்க்கும் வசதிகள் செய்யப்பட உள்ளன. இத்தொலைக்காட்சியின் விளம்பர நிர்வாகத்தை கவனிக்கும் ஃபோர்த் டைமன்ஷன் சிஇஓ சங்கர் கூறுகையில், “எங்கள் குழு இத் தொலைக்காட்சிக்காக இந்தியா முழுவதும் சென்று வந்துள்ளது. அனைவரிடமும் தொலைக்காட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 10 முதல் 12 விளம்பரதாரர்கள் ஏற்கெனவே ‘புது யுகம்’ தொலைக்காட்சிக்கு விளம்பரத்தை வழங்க ஒப்பந்தம் செய்து விட்டார்கள், ” என்றார். விரைவில் ‘புது யுகம்’ தொலைக்காட்சி பற்றி பெரிய அளவில் விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளார்கள்.

Thursday, 26 September 2013

வெப்சைட் எதற்காக தொடங்கப்படுகிறது?


வெப்சைட்டுகளும் உங்கள் தொழிலும் வெப்சைட் எதற்காக தொடங்கப்படுகிறது? தங்களை பற்றி சொல்ல, தங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள, செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல, நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டுசெல்ல மற்றும் பணம் சம்பாதிக்க என்று பலரும் பலவிதமாக வெப்சைட்டுகளை அமைத்து பராமரித்து வருகின்றனர். மக்கள் இப்போது போன் மற்றும் டிவியை விட இன்டர்நெட்டை அதிகம் உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டனர் என்பதே இதற்கு காரணம். ஏனென்றால் நீங்கள் தேடும் மற்றும் எதிர்பார்க்கும் அனைத்தும் இன்டர்நெட்டில் சில நொடிகளில் கிடைக்கிறது. உதாரணமாக இப்போது கிரிக்கெட் நடந்து கொண்டு இருக்கிறது. உங்கள் டிவியில் அந்த சானல் வரவில்லை என்றால் அந்த போட்டியை உங்களால் காண இயலாது. ஆனால் இன்டர்நெட்டில் அப்படியில்லை, அந்த போட்டியை நீங்கள் நேரடியாக அதுவும் இலவசமாக கண்டுகளிக்கலாம். டிவி ஒளிபரப்புகள் மட்டும் இன்டர்நெட் வளர காரணமல்ல. மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கவும், வேண்டாத பொருட்களை விற்கவும், ஒரு செய்தியை தெரிந்து கொள்ளவும் மற்றும் பலவற்றையும் அமர்ந்த இடத்திலேயே இன்டர்நெட் மூலம் பெற்று விடுவதால்தான் இந்த வளர்ச்சி. அதனால்தான் அனைவரும் தங்களுக்கென்று ஆளாளுக்கு வெப்சைட் ஆரம்பித்து வருகிறார்கள். நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தொழில் மட்டுமில்லைங்க உங்களின் சாதனைகள், உங்கள் ஊரில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் உலகத்தாருக்கு தெரியப்படுத்த ஒரு கருவியாகவும் உபயோகப்படுத்தலாம். வெப்சைட்டை பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இந்த பக்கம் பத்தாது, இன்னும் நூறு பக்கங்கள் எழுதவேண்டும். வெப்சைட்டுகள் எப்படி நம் தொழிலுக்கு உதவும் என்பதைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்த வெப்சைட் பார்க்கவும், RPBROTHERS WEB DESIGN COMPANY உங்களுக்காகவோ அல்லது உங்களின் நண்பர்களுக்காகவோ வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், :: +91 8553774615 , sms= 09738685924 RPBROTHERS WEB DESIGN COMPANY

Saturday, 7 September 2013

ஸ்ரீஏம்வி ஹோட்டல்.ஈரோடு


ஈரோட்டில் திரு .வெங்கட்ராமனால் நடத்தப்பட்டு வரும் ஸ்ரீஏம்வி ஹோட்டல்.ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மத்தியில் மிகப் பிரபலம். இவ்வுணவகத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சலுகைகள் விழியிழந்தோருக்கு-20%தள்ளுபடி. உடல் ஊனமுற்றோருக்கு-10 % தள்ளுபடி. அரசுமருத்துவமனைக்கு வரும் மிகவும் வசதி குறைந்த நோயாளிகளுக்கு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு. திரு .வெங்கட்ராமனுக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...!

தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வடநாட்டு பா.ஜ.க எம்.பி பாராளுமன்றத்தில் கோரிக்கை!


இந்திய பாராளுமன்றதில் உள்ள தமிழக எம்பிக்கள் ஒருக்கணம் வியப்பில் மூழ்கினர். அதற்கு காரணம் பாஜகவின் ராஜ்ய சபை உறுப்பினர் தருண் விஜய் தமிழை இந்தியாவின் இரண்டாம் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேற்று எழுப்பியதால் தான். தமிழ் மொழியின் அருமை பெருமைகளை பற்றி வடநாட்டு மக்கள் உணராது , அதற்கு உரிய இடம் அளிக்காதது அவர்களின் கடும் போக்கையே காட்டுகின்றது. ஏழ்கடல் தாண்டி தன்மனம் வீசி புகழ்கொண்டு வாழும் தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழியாக பன்னெடுங்காலமாக நம் நாட்டில் வாழ்ந்து கொண்டு வருகிறது என்று பாராளுமன்றத்தில் பறைசாற்றினார் தருண் விஜய். இவர் ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கொள்கை பரப்பும் பத்திரிக்கை ஆசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க.வின் முன்னாள் செய்தி தொடர்பாளராக இருந்த தருண் விஜய் , தமிழ் மொழியில் வேலை செய்யும் திறன் பெற்றவர்களுக்கு சிறப்பு சலுகைகள் , சம்பள உயர்வு , பதவி உயர்வு கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி , அனைத்து இந்திய பல்கலைகழகங்களிலும் தமிழுக்கு சிறப்பு பிரிவு ஒரு உருவாகப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் , இந்திய நடுவண் அரசு , தமிழை அனைத்து வடநாட்டு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளிலும் பரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் தருண் விஜய் தமிழ் அறிஞர்கள் பலரும் வடநாட்டு இந்துக் கோவில்களுக்கு வந்துள்ளனர். இப்படியாக தென்னாட்டையும் வடநாட்டையும் அவர்கள் இணைத்துள்ளனர். உண்மையான தேசிய ஒருமைப்பாட்டை தமிழ் கவியான பாரதியார் வலியுறுத்தி உள்ளார். இந்தியாவின் பண்பாட்டு புரட்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் காரணியாக விளங்கும் தமிழ் மொழிக்கு உரிய மரியாதையும் , இடமும் இது வரை இந்த நாட்டில் கிடைக்க வில்லை என்பதையும் சுட்டி காட்டியுள்ளார் தருண். தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் போதெல்லாம் தருண் அவர்களை 'வணக்கம்' என்று கூறியே வரவேற்கிறார். தமிழுக்கு ஆதரவான தருண் விஜய்யின் இந்த கூற்றை தமிழக எம்பிக்கள் வரவேற்று உள்ளனர். குறிப்பாக சி.பி.ஐ. கட்சியின் து. ராஜா அவர்கள் , வடநாட்டு தலைவர்கள் இப்படி தமிழ் மொழியை ஆதரிப்பது உண்மையில் பாராட்டுதலுக்கு உரியது என்று பேசினார். இதில் என்ன வியப்பு என்றால் இது நாள் வரை இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும், மற்ற மொழிகள் எல்லாம் அடிமை மொழியாக இருக்க வேண்டும் என்று எண்ணிய பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர் இப்படி ஒரு கருத்தை முன்வைத்துள்ளது தான். இது வடநாட்டு இந்துத்வா மக்களின் மனநிலை முதிர்ச்சியை காட்டுவதாக உள்ளது. தமிழை இந்தியாவின் இரண்டாவது ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பிய வடநாட்டு எம்பியை நிச்சியம் பாராட்டியே ஆகவேண்டும். காரணம் இந்தி மொழி கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளையும் அழித்து வருகிறது என்று மொழியியல் ஆய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர் . இந்தியாவை பொறுத்தவரை , தேசிய மொழி என்று எதுவும் கிடையாது . ஆனால் இந்தி தான் ஆட்சி மொழி அலுவல் மொழி. ஆங்கிலம் துணை அலுவல் மொழியாக உள்ளது . உண்மையின் தருண் கோரியது போல தமிழ் மொழிக்கு ஆட்சி மொழி அதிகாரம் வந்து விட்டால் , தமிழ் மொழியை அழிவில் இருந்து காப்பாற்றி விடலாம். இங்குள்ள தமிழர்கள் பிழைப்புக்காக இந்தியை கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது . தமிழ் மொழியிலேயே அனைத்து நடுவண் அரசு அலுவல்களையும் பார்க்கலாம் . நடுவண் அரசின் நாணயங்கள், அஞ்சல் தலைகள் , கடவுச் சீட்டுகள் , அடையாள அட்டைகள் அனைத்திலும் தமிழும் இடம் பெரும். இதை நியாயமாக தமிழர்கள் போராடி ஆட்சி மொழி அதிகாரத்தை பெற வேண்டும். அதற்காக போராட்ட முன்னெடுப்புகளை தமிழக கட்சிகள் இது வரை எடுக்க வில்லை என்பது வேதனையான விடயம் . நம் தலைமுறையில் தமிழை ஆட்சிமொழியாக்க பாடுபடுவோம். தமிழுக்கு உரிய இடத்தை பெற்றுத் தருவோம்.

இதுதான் நட்பு...!


கார்கில் போரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர்.எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து கிடந்தான். நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வந்து விடுகிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் கமேண்டர் என்றான்.மறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி ,நீ அங்கு போவதால் உன் உயிர்க்கு தான் ஆபத்து என்றார் கமேண்டர். நீ போவது என்றால் போ, ஆனால் நீ போவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை என்று கமெண்டர் சொன்னார்.அதையும் மீறி தன் நண்பனை காப்பாற்ற ஓடினான், அவனை தோளில் தூக்கி கொண்டு வரும்போது எதிரிகள் சுட்டனர். இவனுக்கும் அடிப்பட்டது, அதையும் மீறி அவனை தூக்கி கொண்டு வந்தான். கமேண்டர் அவனை பரிசோதித்து பார்த்தார் அவன் நண்பன் இறந்து போய் இருந்தான்.நான் அப்போழுதே சொன்னேன் நீ அவனை காப்பாற்றப்போவதால் எந்த உபயோகமும் இல்லை ,இப்போது பார் நீயும் அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார் கமேண்டர். நான் போனது தான் சார் சரி என்றான்.என்ன சொல்கிறாய் உன் நண்பன் இறந்து கிடந்தான் நீ சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார் கமேண்டர். நான் அங்கு போகும்போது என் நண்பன் உயிருடன் தான் சார் இருந்தான்.”என்னை காப்பாற்ற நீ வருவாய் என்று எனக்கு தெரியும் நண்பா” என்று சொல்லிவிட்டு தான் சார் இறந்தான் .அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும் சார் இந்த காயம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றான். இதுதான் உண்மையான நட்பு...! .

Friday, 6 September 2013

மல்லிகைப்பூ. இட்லி


உளுந்தம் பருப்பு தேவையான அளவு எடுத்துக்கொன்டு அதற்க்கு ஏற்ப தண்ணீர் விட்டு ஊறவைக்கவோன்டும் பின்பு ஊறவைத்த உளுந்தை பிரிஜ்க்குள் வைத்து சுமார் 20நிமிடம் வைத்து பின்பு வெளியில் எடுத்து வைக்க வேன்டும் பின்பு அதற்க்கு ஏற்ப தேவையான அளவு ஊறவைத்த அரிசி முதலில் கிரைன்டரில் அரைத்து எடுத்துக்கெள்ளவும் பின்பு ஊறவைத்த ஊளுந்தம்பருப்பை கிரைன்டரில் குளிர்த ஐஸ்தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக்கெள்ளவும் தேவைக் ஏற்ப உப்பு சேர்த்து மாவை கரைத்துவைக்கவேன்டும் பின்பு மறுநாள் காலை இட்லி செய்தால் மனம்கவறும் மல்லிகைப்பூ. இட்லிரெடி எழதியது ஆர்.பவுன்ராஜ்

rp brothers ad1