RP Brothers TV Channel

Monday 11 March 2013

இலங்கைக்கு எதிராக…எழுச்சி பெற்றுள்ள மாணவர்கள் போராட்டம்


இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் எழுச்சி பெற்றுள்ளது. விடிய விடிய கொட்டும் பனியில் மாநிலம் முழுவதும் பல இடங்களில் மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் சார்பின்றி நடைபெறும் இந்தப் போராட்டம் மேலும் தீவிரமடையும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், ஆங்காங்கே உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த, இலங்கை அதிபர் ராஜபக்சவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லையில் மாணவர்கள் உண்ணாவிரதம்: இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேரும், நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் 13 பேரும், தூய சவேரியார் கல்லூரி மாணவர்கள் 11 பேரும் நேற்று பிற்பகல் முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். தங்களின் போராட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்:இலங்கை அரக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் எனக்கூறி, கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேர் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் கோவை மதிமுக அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4 மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, புதுச்சேரியிலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேர், புதிய பேருந்து நிலையம் அருகே, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாமலைபல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்: இலங்கை அதிபரை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும், இலங்கைக்கு எதிரான தீர்மனத்திற்கு இந்தியா ஆதரவளிக்கக் கோரியும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நீடிக்கிறது.

No comments:

Post a Comment

rp brothers ad1