RP Brothers TV Channel

Sunday 7 December 2014

மீனவர்கள் கடல் எல்லையை தாண்டினால் எச்சரிக்கும் புதிய செல்போன்

 https://play.google.com/store/apps/details?id=com.cando.SOR

தூத்துக்குடி: தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டும்போது, அவர்களை எச்சரிக்கும் வகையிலான செல்போன் அப்ளிகேஷன் சாப்ட்வேரை ஒரு என்ஜீனியர் கண்டுபிடித்துள்ளார். தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது எல்லைக்கோடு குறித்து தெரியாததால் இலங்கை எல்லை பகுதியில் சென்று விடுவது நடந்து வருகிறது. இதனால் தமிழக மீனவர்களை இலங்கை கடற்ப்படையினர் கைது செய்து கொடுமைப்படுத்துவதும், கடும் தண்டனை வழங்குவதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
 https://play.google.com/store/apps/details?id=com.cando.SOR
இதனை தவிர்க்கும் பொருட்டு ஆண்டிராய்ட் கைத்தொலைபேசிகளுக்கான கூகுள் பிளே ஸ்டோரின் இந்திய வடிவத்தில் இலவசமாக கிடைக்கக்கூடிய 'சேவ் அவர் ரேஸ்' சுருக்கமாக 'எஸ் ஓ ஆர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாப்ட்வேர் இணையத் தொடர்பு இல்லாமலும், கைத்தொலைபேசி சிக்னல் இல்லாமலும்கூட பயன்படுத்திட முடியும். மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது இந்திய கடல் எல்லைமுடிந்து அடுத்த நாட்டின் கடல் எல்லை நெருங்குவதை 1 கிலோ மீட்டருக்கு முன்பே அவர்களது மொபைல் போனில் அது எச்சரிக்கை ஒலியினை எழுப்பும். உதாரணத்திற்கு படகு ஒன்று சர்வதேச கடல் எல்லையை நெருங்கும்போதே இந்த செல்போன் எச்சரிக்கை ஒலியெழுப்பும்.
 https://play.google.com/store/apps/details?id=com.cando.SOR
சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி விட்டால், எச்சரிக்கை படம் திரையில் தோன்றுவதோடு, வெளியேறு என்ற எச்சரிக்கை வார்த்தைகளையும் இந்த செல்போன் எழுப்பும். இதனால் மீனவர்கள் உஷராகி, எல்லை மீறாமல் மீன் பிடிக்க முடியும். இதற்கான சாப்ட்வேரை தூத்துக்குடி, பெரைரா தெருவை சேர்ந்த என்ஜீனியர் ரெசிங்டன் என்பவர் கண்டறிந்துள்ளார். இதனை அவர் நேற்று தூத்துக்குடியில் அறிமுகம் செய்தார். இதுகுறித்து ரெசிங்டன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் ஏழு லட்சம் மீனவ குடும்பங்கள் உள்ளன. இவர்களது தீராத பிரச்னை இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதால், அவர்களது கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இதற்கான நிரந்தர தீர்வு வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இரவு பகல் பராது தொடர்ந்து மூன்று ஆண்டு முயற்சி, பல்வேறு கட்ட சோதனைகளை நடத்தி இந்த சாப்ட்வேர் கண்டறிந்துள்ளேன்.
 https://play.google.com/store/apps/details?id=com.cando.SOR
இந்திய-இலங்கை இந்த இரு நாடுகளுக்கிடையேயான கடல் எல்லைக் கோடு வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் வளைகுடா ஆகியவற்றை கொண்டதாகும். எல்லைக்கோடு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில் 1974 ல் வரையறை செய்யப்பட்டது. இது 1,095 கி.மீ., நீளம் கொண்டது. கடலளவில் 591 நாட்டிக்கல் மைல் கொண்டது. கடலில் இந்த எல்லைக் கோடுகள் கண்ணுக்கு புலப்படாத கோடு, என்பதால் மீனவர்கள் அடிக்கடி பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். கூகுள் பிளே ஸ்டோரில் இந்த சாப்ட்வேர் உள்ளது. பேஸ்புக், வாட்ஸ்அப், போல் இதனை மீனவர்கள் தங்களது ஆன்ட்ராய்டு மொபைலில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். தங்கள் மொபைலில் டவுன்லோடு செய்த பின்னர், எந்த பயமும் இன்றி தடங்கலின்றி கடலில் மீன் பிடிக்கலாம்.
 https://play.google.com/store/apps/details?id=com.cando.SOR
மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது இலங்கை கடல் எல்லைக்கு முன்பாக ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் எச்சரிக்கை கோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை மீனவர்களின் படகு அடையும் போது, அவர்கள் வைத்திருக்கும் ஆண்ட்ரைடு மொபைலில் மஞ்சள் வண்ணத்தில் எச்சரிக்கை அறிவிப்புடன், ஒலி எழுப்பும். அதனை தாண்டி அந்த படகு இலங்கை எல்லைக்கோட்டை தாண்டும் போது,சிவப்பு வண்ணத்தில் "வெளியே' என எச்சரிக்கையுடன் கூடிய ஒலியினை எழுப்பும். இந்த சாப்ட்வேரில் ஒரு திசை காட்டும் கருவி உள்ளது. இது வேலை செய்ய எவ்வித இணையதள வசதியும்,மொபைல் சிக்கனலும் தேவையில்லை. மொபைல் ஆப் லைனில் இருந்தாலும் செயல்படும் விதமாக 
வடிவமைக்கப்பட்டுள்ளது.ஆபத்து என்ற சமயத்தில் மீனவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபயக் குரலாக குறுந்தகவல் அனுப்புவதற்கான வசதியும் இந்தச் செயலியில் உள்ளது. ஜி.பி.எஸ்.கருவியில் அட்சரேகை, தீர்க்கரேகை அடிப்படையில் வரைப்படங்கள் இருப்பதால், சாதாரண மீனவர்களுக்கு தெரிவதில்லை. நான் கண்டுப் பிடித்துள்ள புதிய சாப்ட்வேரில் மேப் வசதியுள்ளது. அதில் அனைவரும் அறிந்துக் கொள்ளும் வண்ணம் அனைத்து கட்டளைகளும் தமிழில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனை மீனவர்கள் எளிதில் புரிந்து கொள்ளமுடியும்.மீனவர்களின் படகுகள் எல்லை தாண்டியற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைப்பதில்லை. இந்த சாப்ட்வேரில் மீனவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நபருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும், அவர்களது மொபைல் போனில் எல்லை தாண்டியதும் பதிவாகிவிடும்.
 https://play.google.com/store/apps/details?id=com.cando.SOR
ஆபத்து நேரங்களில் மீனவர்கள் இந்த சாப்ட் வேரை மொபைலின் திரையில் தொட்டால் போதும், அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பும்.அதில் மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ., கோடுடன் வருவதால் பொய்தகவல்களை அனுப்ப முடியாது. மேலும் படகு இருக்கும் இடத்தை துல்லியமாகவும், எஸ்.எம்.எஸ்., அனுப்பியவரின் மொபைல் எண்ணும் அதில் பதிவாகி இருக்கும். இதன் மூலம் நடுக்கடலில் தத்தளிப்பவர்கள் குறித்த தகவலை எளிதில் கரையில் உள்ளவர்களுக்கு தெரிவித்து, கடற்படை மூலம் மீனவர்களை எளிதில் மீட்க வழி செய்யும், இதில் தகவல்கள் அனைத்தும் எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்படுவதால், இதற்க்கு மட்டும் அவர்கள் மொபைல் போனில் சிக்னல் தேவைப்படும். இது மீனவர்களை துன்பங்களில் இருந்து காக்கும் வரப்பிரசாதமாக அமையும் என்றார் அவர்.
 Download SOR app ( Save our Race - Save our Indian Fisher Man)

No comments:

Post a Comment

rp brothers ad1