RP Brothers TV Channel

Saturday 13 April 2013

காமராஜர் ஒரு சகாப்தம்


"காமராஜ் முதலமைச்சராக இருந்த போது மதுரைக்கு சென்றார். இரவு விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந­்தது. விருந்தினர் மாளிகையிலோ இரவு மின்சாரம் இல்லை. ஊழியர்கள் வந்து பழுது பார்த்துக்கொண்ட­ிருந்தார்கள். காத்திருந்த காமராஜ், " கட்டிலைத் தூக்கி மரத்தடியில் போடு" என்றார். அறைக்குள்ளிருந்­த கட்டிலை வேப்பமரத்தடியில­் கொண்டுவந்து போட்டார்கள். காமராஜ் படுக்க வந்தார். கட்டில் அருகே ஒரு போலீஸ்காரர் காவலுக்கு நின்று கொண்டிருந்தார். " நீ ஏன் இங்கே நிற்கிறாய்? என்னை யாரும் தூக்கிக்கொண்டு போய்விடமாட்டார்­கள்! நீயும் போய்ப் படு" என்று போலிஸ்காரரை அனுப்பிவைத்த காமராஜ் சில நொடிகளில் உறங்கிவிட்டார். இந்த எளிமை உலக வரலாற்றில் எந்த மக்கள் தலைவரிடமும் காண்பது அரிது."

1 comment:

  1. புதிதாக வெப்சைட் தொடங்க வேண்டுமா...?

    www.RPBrothers.in சென்று உங்களின் புதிய வெப்சைட்டை நிறுவுங்கள். உங்களுக்கு தமிழிலேயே உதவிகள் வழங்கப்படும்.

    ReplyDelete

rp brothers ad1